உலக வரலாறு – H.G.வெல்ஸ் நாவல் கண்ணோட்டம்
உலக வரலாறு – H.G.வெல்ஸ் நாவல் கண்ணோட்டம்
H.G.வெல்ஸ் எழுதிய "A Short History of the World" நூல், தமிழில் "உலக வரலாறு" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. நான் அந்த நூலை வாங்கி படிக்கத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு பக்கத்திலும் புதுசாக ஒரு உலகத்தை கண்டறிந்த உணர்வு ஏற்பட்டது. மனித இனத்தின் வரலாறு சில ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமே இருந்து வந்தாலும், உலக வரலாற்றின் பாதை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதாகும். இதற்கான ஆதாரமாக ஆய்வாளர்கள் கண்டறிந்த 16 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகளின் தகவலை வெல்ஸ் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மனிதன் பரிணாம வளர்ச்சியின் ஆச்சரியங்களை வெல்ஸ் அழகாக விவரிக்கிறார். Neanderthal மற்றும் Homo Erectus போன்ற பழமையான மனித இனங்கள் இருந்து, நாம் இன்று நாகரிக மனிதராக உருவாகி வந்த கதை, அறிவியல் ஆதாரங்களுடன் விரிவாகப் பேசப்படுகிறது. சாக்ரடீஸ், புத்தர், லாவோஸி போன்ற சிந்தனையாளர்களின் ஆழ்ந்த பார்வைகள், யூதம் மற்றும் ஆரிய இனங்களின் வரலாற்றுப் பாதைகள், பேரரசுகள் உருவாகி அழிந்தது போன்ற பல விஷயங்கள் எளிய மொழியில் சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகின்றன.
இந்நூல் வெறும் வரலாற்றுத் தகவல்களைக் கூறுவதற்காக மட்டும் அல்ல, மனித இனத்தின் வளர்ச்சியை நேர்த்தியான சித்திரமாக வரைந்து, உலகைச் சிந்திக்க வைக்கும் முயற்சியாகவும் இருக்கிறது. இது ஒவ்வொரு பக்கத்திலும் படிப்பவரை கவரும் ஆற்றல் கொண்டது. H.G.வெல்ஸின் இந்த அற்புதக் குரல், மனித வாழ்வின் அடித்தளத்தை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.
வெங்கடரமணன் ராமசேது
21.01.2025